பரிசில் இருந்து லண்டனுக்கு புதிய தொடருந்து சேவை!!

8 சித்திரை 2025 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 1318
பரிசில் இருந்து லண்டனுக்கு புதிய தொடருந்து நிறுவனம் ஒன்று சேவைகளை இயக்க உள்ளது.
இத்தாலியில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் Ferrovie dello Stato எனும் நிறுவனமே இந்த புதிய பரிஸ்-லண்டன் சேவைகளை வழங்க உள்ளது. வரும் 2029 ஆம் ஆண்டில் சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பல பில்லியன் யூரோக்களை முதலிட்டுள்ளது. குறித்த நிறுவனம் ஏற்கனவே சேவையில் உள்ள Evolyn நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து சேவைகளை வழங்க உள்ளது.
இத்தாலி-பிரான்ஸ் இடையே பயணிக்கும் Frecciarossa தொடருந்து நிறுவனம் போன்று அதிவேக சேவையாக இது அமைந்திருக்கும் எனவும், இது யூரோ சுரங்கப்பாதை வழியாக (le tunnel sous la Manche) சேவைகளை இயக்கும் ஐந்தாவது நிறுவனமாகும்.