ஐபோன்களின் விலை அதிகரிக்கிறது!!

8 சித்திரை 2025 செவ்வாய் 13:47 | பார்வைகள் : 2151
பிரான்சில் ஐபோன்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா கொண்டுவந்த இறக்குமதி வரி அதிகரிப்பை அடுத்து, சீனா-அமெரிக்கா இடையே பெரும் வணிகப்போர் இடம்பெற்று வருகிறது. சீன பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இதற்கு பழிவாங்கும் நோக்கில் சீனாவிற்கான சுங்க வரிகள் 50% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு வரி உயர்வடைகிறது.
பெருமளவான ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால், வரி அதிகரிப்பினால் ஐபோன்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது. ஐபோன்களை அமெரிக்காவில் தயாரித்தால் அதன் விலை $3,500 டொலர்கள் வரை செல்லும் அபாயம் இருப்பதால், ஆப்பிள் நிறுவனம் சிக்கலில் உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக நடைமுறைக்கு வருவது போல் பிரான்சில் ஐபோன்களின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த இறக்குமதி வரி அதிகரிப்பை அடுத்து, ஆப்பிப் நிறுவனத்தின் பங்குகள் 19% சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.