Paristamil Navigation Paristamil advert login

அட்லி-அல்லு அர்ஜுன் படத்தின் ஆச்சரிய தகவல்..!

அட்லி-அல்லு அர்ஜுன் படத்தின் ஆச்சரிய தகவல்..!

8 சித்திரை 2025 செவ்வாய் 16:04 | பார்வைகள் : 863


அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் படத்தின் முறையான அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பள விவரங்கள் இணையத்தில் கசியியுள்ளது. முதல் முறையாக அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் இந்த படத்திற்காக, அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி ரூபாய், அட்லிக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நாயகி, இசையமைப்பாளர், மற்றும் பிற முக்கிய நட்சத்திரங்களுக்கு மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவிலான சம்பளம் வழங்கப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலாக, இந்த படத்தின் தொழில்நுட்ப பணி மிகப்பெரியதாக இருக்கும் என்பதால், அதற்கும் ஒரு பெரிய தொகை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனாலேயே இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாயை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அட்லியின் முந்தைய படம் 'ஜவான்' 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனைவும், அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படமும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதை கருத்தில் எடுத்தால், இந்த இருவரும் இணையும் இந்த படம் மிகப்பெரிய வசூலைப் பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

600 கோடி பட்ஜெட்டை சாட்டிலைட், ஓடிடி, மற்றும் ஆடியோ உரிமைகள் மூலம் பாதி தொகையை மீட்டுவிடலாம் எனவும், டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்