Paristamil Navigation Paristamil advert login

மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி

8 சித்திரை 2025 செவ்வாய் 16:10 | பார்வைகள் : 225


இன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆரோக்கியமான மற்றும் விரைவாக செய்யக்கூடிய உணவுகளைத் விரும்புகிறார்கள். அந்த வகையில், சத்துகள் நிறைந்ததும், சுவையான, செய்வதற்கும் எளிமையான ஒன்று தான் “மஷ்ரூம் பிரியாணி”.

தேவையான பொருட்கள்  பாஸ்மதி அரிசி, மிளகாய், கொத்தமல்லி, புதினா, தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் மஷ்ரூம். சுவைக்கு தேவையான மசாலாக்கள் – பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போன்றவை. மற்றும் எண்ணெய் நெய்.

முதலில் மஷ்ரூம் ஐ நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். மிக்க்ஸியில் கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு அருமையான பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து மசாலா பொருட்களை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதும், தக்காளியும், அரைத்த மசாலா பேஸ்டும், தயிரும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் எண்ணெய் பிரிந்து வந்ததும், மஷ்ரூம் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் மூடி வைத்து, தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசியை சேர்த்து 2 விசில் வரை வேக விட வேண்டும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மஷ்ரூம் பிரியாணி, சுவையிலும், நறுமணத்திலும், பார்வையிலும் மனதைக் கவரும். வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறினால், சிறப்பான இரவு உணவாக அமையும். ஆரோக்கியமான சாப்பாடு தேடும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த தேர்வு!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்