நிக்கோலா சார்க்கோசிக்கு 7 வருடச் சிறைத்தண்டனை?

8 சித்திரை 2025 செவ்வாய் 18:07 | பார்வைகள் : 2057
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவிடம் நிதி வாங்கி மோசடி செய்த குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபகதி நிக்கோலா சார்க்கோசிக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகின்றது.
2007ஆம் ஆண்டு தேர்தலிற்காக கடாபியிடம் பணம்பெற்று பிரச்சாரம் நடத்திய குற்றத்திற்கான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 25ம் திகதி பரிசின் குற்றவியல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட உள்ளது.
தேசிய நிதிக் குற்றவியல் நிறுவனம் சார்க்கோசிக்கு 7 வருடச் சிறைத் தண்டனையும் 300.000 யூரோக்கள் அபராதமும் வழங்கப்படவேண்டும் என கடந்த 27ம் திகதி கோரியுள்ளது.
இந்த வழக்கிற்கு எதிராகத் தான் தொடர்ந்து போராடுவேன் என நிக்கோலா சார்க்கோசி தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஏனோ எமானுவல் மக்ரோனிற்கு எதிரானவர்களிற்கு மட்டும் மிக விரைவாகத் தண்டனைகள வழங்கப்பட்டு வருகின்றன.