”உள்ளது உள்ளபடியே...” - காஸா மீதான தாக்குதலுக்கு மக்ரோன் கண்டனம்!!

8 சித்திரை 2025 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 1960
காஸாவில் மக்கள் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
காஸாவுக்கு மிக அருகில் இருக்கும் எகிப்த்துக்கு சொந்தமான al-Arish நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார். யுத்தமுனையில், பொதுமக்கள் கொல்லப்பட்டுவதை அனுமதிக்க முடியாது. மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதி மீது இன்று ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியார்கள், மருத்துவ மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்துள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.
”உண்மை எப்படி இருக்கவேண்டுமோ அது உள்ளது உள்ளபடியே நிலைநாட்டப்படவேண்டும்” எனவும் ஜனாதிபதி மக்ரோன் மிக காட்டமாக தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களை பாதுகாக்க அங்கு கடமையாற்றிவந்த UNRWA மற்றும் UN அமைப்புகளைச் சேர்ந்தவர்களில் 330 பேர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரின் பின்னர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.