Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு கணித மேதை Blaise Pascal!!

பிரெஞ்சு கணித மேதை Blaise Pascal!!

17 மார்கழி 2016 சனி 10:30 | பார்வைகள் : 20055


பிரெஞ்சு தேசத்தில் உருவான மாமேதைகள் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. அளப்பரிய பல சாதனைகள் கண்டுபிடிப்புக்கள் என நீளும் அவர்கள் பட்டியல்! இதோ கால்குலேட்டர் என அழைக்கப்படும் கணினியை கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படும் Blaise Pascal குறித்து சில தகவல்கள் பார்க்கலாம்!
 
ஜெர்மனியை சேர்ந்த Wilhelm Schickard  என்பவர் முதலில் கணினியை கண்டுபிடித்தார். ஆனால் அது அத்தனை வசதியாகவும் எழிதாகவும் இல்லை. பின்னர் அதை பிரான்சைச் சேர்ந்த Blaise Pascal இலகுவாகவும், மிகச்சரியாகவும் உருவாக்கினார். இது தவிர கணிதவியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்தார் பல புதிய நியமங்களை உருவாக்கினார். 
 
ஜூன் 19,  1623 ஆம் ஆண்டு Auvergneஇன் Clermont-Ferrand இல் பிறந்தார் Blaise Pascal. சிறுவயது முதல் கணிதத்தை தனது தந்தையிடம் கற்றார். பின்நாட்களில் கணித மேதை, இயற்பியல் கண்டுபிடிப்பாளர் என உருவானார். சிறுவயது முதலே கணிதம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர், Pascal's triangle எனும் தியரியை கண்டுபிடித்தார்.  மேலும் கூம்பியல் தொடர்பான பல சித்தார்த்தங்களையும் உருவாக்கினார். 
 
பிரெஞ்சு தேசத்துக்கும், கணிவியல் உலகுக்கும் பெரும் பங்காற்றிய மேதை Blaise Pascal, ஓகஸ்ட் 19, 1662 ஆம் ஆண்டு, தனது 39 வது வயதில் காலமானார். நாற்பதாண்டுகள் கூட வாழவில்லை... ஆனால் அவர் விட்டுச்சென்றவை நான்கு நூற்றாண்டுகளைக் கடக்கிறது...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்