Paristamil Navigation Paristamil advert login

கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு

கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு

9 சித்திரை 2025 புதன் 07:25 | பார்வைகள் : 248


காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து, 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன், அதிருப்தி மாவட்டத் தலைவர்களும், சென்னையிலிருந்து நேற்று புறப்பட்டு சென்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி தலைமையேற்று, 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்த நாளையும் நினைவு கூறும் வகையில், கட்சியின் தேசிய மாநாடு, குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் மாநாடு இன்று முடிவடைகிறது. மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிக்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா மற்றும் 3,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, மாவட்டத் தலைவர்களும், தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஆமதாபாத்துக்கு சென்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்