Paristamil Navigation Paristamil advert login

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு துாக்கு

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு துாக்கு

9 சித்திரை 2025 புதன் 11:32 | பார்வைகள் : 614


ஹைதராபாதில், கடந்த 2013-ல் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு துாக்கு தண்டனையை உறுதி செய்து, தெலுங்கானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வழக்குப்பதிவு

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 2013, பிப். 21-ல் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. பஸ் நிலையம் மற்றும் அருகில் இருந்த கடை ஆகியவற்றில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர்; 131 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பினர் முக்கிய காரணமாக இருந்தனர். இது தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தியன் முஜாகிதீன் இணை நிறுவனர் முகமது அகமது சிதிபாபா என்ற யாசின் பத்கல், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான், அசதுல்லா அக்தர், தஹசீன் அக்தர், அஜாஸ் ஷேக் ஆகிய ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம், ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து 2016-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் லட்சுமணன், ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

கொடூர குற்றம்

பயங்கரவாதிகள் ஐந்து பேரின் மரண தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், 'என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, வலுவான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான இந்த கொடூர குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். எனவே, அது சரியான தீர்ப்பு' என கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்