ட்ரம்ப் தனது முடிவை மறு பரிசீலிக்கவேண்டும்.. - ஜனாதிபதி மக்ரோன்!!
.jpeg)
9 சித்திரை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1490
அமெரிக்கா கொண்டுவந்த இறக்குமதி வரியினை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், “பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா ஒருபோதும் குழப்பத்தை விரும்பியதில்லை” என குறிப்பிட்டார். மேலும், ”எங்களுடைய பொருளாதாரத்துறைகள் அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். இத்துறைகளில் பணிபுரியும் நமது அனைத்து தோழர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, “டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவினை மறுபர்சீலனைக்கு உட்படுத்தக்கூடிய முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்!” எனவும் அவர் தெரிவித்தார்.