பிள்ளையான் கைது - வெளியான காரணம்

9 சித்திரை 2025 புதன் 05:28 | பார்வைகள் : 992
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) இரவு கைதுள்ளனர்.
உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.