Paristamil Navigation Paristamil advert login

நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் தனித்தீவில் சிறை!!

நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் தனித்தீவில் சிறை!!

9 சித்திரை 2025 புதன் 06:29 | பார்வைகள் : 2693


குற்றச்செயல்களின் ஈடுபடும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் obligation de quitter le territoire - OQTF) இனை மீறுவோருக்கு பிரெஞ்சுத்தீவு ஒன்றில் சிறைவைக்கும் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்டும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற பணிப்பதே obligation de quitter le territoire சட்டம் ஆகும். நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என கருதப்பட்டும் அவர்கள், வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை. அவர்களால் நாட்டில் பல தடவைகள் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அவர்களை கனேடிய தீவான Newfoundland இற்கு தெற்கே உள்ள பிரெஞ்சு தீவுக்கூட்டங்களில் ஒன்றான Saint-Pierre-et-Miquelon
இல் சிறைவைக்கும் திட்டம் ஒன்றை பிரெஞ்சு பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் Laurent Wauquiez முன் மொழிந்துள்ளார்.

இந்த தீவானது பிரான்சில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 5℃ வெப்பம் மட்டுமே நிலவும். அதேவேளை அங்கு வருடத்தில் சராசரியாஅ 146 நாட்கள் பனிப்பொழிவு பதிவாகிறமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சிறைவைப்பவர்கள் மீண்டும் பிரான்சுக்கு திரும்ப முடியாதவாறு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்