Paristamil Navigation Paristamil advert login

நடு கடலில் தத்தளித்த படகு.. - 72 அகதிகள் மீட்பு!!

நடு கடலில் தத்தளித்த படகு.. - 72 அகதிகள் மீட்பு!!

9 சித்திரை 2025 புதன் 10:00 | பார்வைகள் : 1315


நேற்று ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை மாலை பா-து-கலே கடற்பிராந்தியமூடாக பிரித்தானியா செல்லப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்தது.

பா-து-கலேயின் Saint-Etienne-au-Mont நகர்பகுதி வழியாக 72 அகதிகள் ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்த நிலையில், நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக படகு பழுதடைந்து நின்றது. உடனடியாக கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் சிறப்பு படையினரான centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) அமைப்பினரால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

முன்னதாக ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு Wimereux (Pas-de-Calais) நகரம் வழியாக இரு படகுகளில் பயணித்த 115 அகதிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்