Paristamil Navigation Paristamil advert login

பரிசில் ஒரு ஆங்கில நூலகம்!

 பரிசில் ஒரு ஆங்கில நூலகம்!

15 மார்கழி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19033


பரிசில் எண்ணற்ற நூலகங்கள் உள்ளன. ஆனால் இந்த நூலகம் கொஞ்சம் 'ஸ்பெஷல்!' முழுக்க முழுக்க ஆங்கில நூல்கள் கொண்ட நூலகம் இது. வாருங்கள் American Library in Paris குறித்து தெரிந்துகொள்வோம்!!
 
American Library in Paris ஆனது, ஐரோப்பாவின் மிகப்பெரும் ஆங்கில மொழி நூலகமாகும். மொத்தமாக 120,000 ஆங்கில மொழி நூல்கள் இங்கு இறைந்து கிடக்கின்றன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட 19ஆம் நூற்றாண்டு நூல்களும் உண்டு. தவிர என்சைக்ளோபீடியா DVDகளும், ஓடியோ CD களும் இங்கு உள்ளன. 
 
American Library Association நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் 1920 ஆம் ஆண்டு இந்த நூலகம் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது 60 நாடுகளைச் சேர்ந்த 2500 அங்கத்தவர்கள் உள்ளார்கள் இந்த நூலகத்துக்கு. 
 
முதலாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததும், அமெரிக்க நூலகம் உலகம் முழுவதும் நூலகங்களை விஸ்தரிக்கும் வேலையை மேற்கொண்டது. அத்லாண்டிக் முழுவதும் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அமெரிக்கா அனுப்பியது. அப்படி வந்து சேர்ந்த புத்தகங்களால் உருவானது தான்  பரிசில் உள்ள அமெரிக்க நூலகம்.
 
நூலகம் உருவாக்கப்பட்ட மூன்று வருடங்களில் பல வாசகர்களை சென்றடைந்தது. 35 வீத அமெரிக்கர்களும், 33 வீத பிரெஞ்சு மக்களும் என மொத்தம் 35,000 வாசகர்களுக்கு அறிவாலயமாக திகழ்ந்தது. 
 
இரண்டாம் உலகப்போரின் போது, பல பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டதுபோல், நாசி படையினரின் கோர தாண்டவத்துக்குள் இருந்து இந்த நூலகம் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்டது. 
 
தற்போது, இந்த நூலக அங்கத்தவர்களுக்கு இங்கிருக்கும் நூல்களின் விபரங்களை இணையத்தளமூடாக அறிந்துகொள்ளக்கூடிய வசதி செய்துதரப்பட்டுள்ளது. 
 
 10 Rue du Général Camou, 75007 Paris முகவரியில் உள்ள இந்த நூலகம் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை திறந்திருக்கும். 
 
வாங்க வாசிக்கலாம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்