Paristamil Navigation Paristamil advert login

தொடர் தோல்வியில் தடுமாறும் CSK - பிளே-ஆஃப் செல்ல எத்தனை வெற்றி தேவை?

தொடர் தோல்வியில் தடுமாறும் CSK - பிளே-ஆஃப் செல்ல எத்தனை வெற்றி தேவை?

9 சித்திரை 2025 புதன் 08:48 | பார்வைகள் : 325


2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 5 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை மற்றும் மும்பை இந்த ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.

அதன்பிறகு விளையாடிய 4 போட்டிகளிலும், தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதே போல் மும்பை அணியும், 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.
 
விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு தோல்வி கூட அடையாத அணியாக, டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற, ஒரு அணி குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

இதன்படி சென்னை அணி, 5 போட்டிகளில் 4 தோல்வியடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அணி, நேற்றைய பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் மட்டும், 5 கேட்சுகளை தவற விட்டது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணம் என அணித்தலைவர் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஐபிஎல் தொடரில் அதிக கேட்சை தவற விட்ட அணிகளின் பட்டியலில், 11 கேட்ச்சை தவற விட்டு சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.
 
மறுபுறம் துடுப்பாட்டத்திலும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி 180 ஓட்டங்களை சேஸ் செய்யவில்லை.

எதிர்வரும் போட்டிகளில், சென்னை அணி துடுப்பாட்டம் மற்றும் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் Playoff க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்