ஐபிஎல்-லில் புதிய வரலாற்று சாதனை படைத்த M.S தோனி!

9 சித்திரை 2025 புதன் 12:27 | பார்வைகள் : 394
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற நடப்பு சீசனின் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போது இந்த சாதனையை தோனியை படைத்துள்ளார்.
இந்த போட்டியின் 8-வது ஓவரில், பஞ்சாப் வீரர் நேஹல் வதேரா அடித்த பந்தை தோனி மின்னல் வேகத்தில் கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை அவர் தன் வசமாக்கியுள்ளார்.
தோனிக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 137 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரியன்ஷ் ஆர்யா தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கிய நிலையில், 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.