Paristamil Navigation Paristamil advert login

கொள்ளைக்கும்பல் - 'La Bande à Bonnot'

 கொள்ளைக்கும்பல் - 'La Bande à Bonnot'

14 மார்கழி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 19143


பிரான்ஸில் கொள்ளைகளுக்கும் கொள்ளைக்கும்பல்களுக்கும் அளவே இல்லை.  பிரெஞ்சு புதினம் இதுவரை பல கொள்ளைச் சம்பவங்களையும் கொள்ளையர்களை பற்றியும் பகிர்ந்திருந்தது. இதோ கடைசி வரை 'கடுக்காய்'கொடுத்த ஒரு கொள்ளைக்கும்பல் பற்றி இன்று பார்க்கலாம்!
 
La Bande à Bonnot!!
 
இந்த கும்பலை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் 'அராஜகம்' என சொல்லலாம். அப்படித்தான் விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது. 1911களில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் இந்த கும்பல் தலைவிரித்தாடியது. கொள்ளையடிப்பது, சூறையாடுவது, கடத்துவது இது மட்டுமே தொழில். வெவ்வேறு பிரதேசங்களில் வசித்த இந்த கொள்ளையர்களுக்கு தலைவன் Jules Bonnot என்பவன். அதனாலயே இந்த குழுவுக்கு La Bande à Bonnot என பெயர். 
 
Octave Garnier என ஒரு மகா கெட்டிக்கார கொள்ளையனும் இந்த குழுவில் இருந்தான். தவிர Raymond Callemin, Étienne Monier, André Soudy உட்பட எண்ணற்ற பல கொள்ளையர்கள் இந்த குழுவில் உண்டு.  இந்த குழுவின் முதலாவது கொள்ளைச்சம்பவம் Société Générale  வங்கியில், டிசம்பர் 21, 1911ஆம் ஆண்டு இடம்பெற்றது. பின்னர் அதே வருடம் பரிசில் ஒரு ஆயுத கிடங்கை சூறையாடியது. அதன் பின்னர் அடுத்த வருடம் 1912இல், பிரெஞ்சு பணக்காரர் M. Moreau என்பவரை கொலை செய்துவிட்டு 30,000 francs ஐ கொள்ளையிட்டுச்சென்றது. 
 
இந்த குழுவில் உள்ள சிலரை, வாகனங்களை திருடி பெல்ஜியத்தில் விற்கும் போது ஒருதடவை National Policeஆல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னரும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர... காவல்துறைக்கு தலைவலி நீடித்தது.
 
பின்னர் கொள்ளைக்கும்பல் தலைவனான Jules Bonnot ஐ பிடிப்பதற்கு திட்டமிடப்பட்டு, பின் தொடர்ந்து Choisy-le-Roi இல் உள்ள அவனது வீட்டில் வைத்து கொல்லப்பட்டான். கொல்லப்பட்டதென்றால் சாதாரணமாகவா? இல்லை.. 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீயணைப்பு படை, இராணுவத்தினர் எல்லாம் வரவழைக்கப்பட்டு, Jules Bonnot சுட்டுக்கொல்லப்பட்டான்!
 
அதன் பின்னர் அக்கும்பலில் உள்ள பலர் வரிசையாக கொல்லப்பட்டனர். இருந்தும் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் தப்பித்தவர்கள் பலர் என தெரிவிக்கப்படுகிறது. 
 
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்