Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : மருந்தக ஊழியரை தாக்கி €100,000 யூரோக்கள் கொள்ளை!!

Aubervilliers : மருந்தக ஊழியரை தாக்கி €100,000 யூரோக்கள் கொள்ளை!!

9 சித்திரை 2025 புதன் 13:52 | பார்வைகள் : 2531


மருந்த ஊழியர் ஒருவர் வங்கியில் பணத்தை வைப்பிலிடச் சென்ற நிலையில், அவரை தாக்கி அவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Pantin (Seine-Saint-Denis) நகரில் உள்ள மருந்தகம் ஒன்றின் மேலாளர் ஒருவர் பணத்தை வைப்பிலுடுவதற்காக வங்கி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இரு கொள்ளையர்கள் அவரை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். 

நேற்று ஏப்ரல் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி அளவில் Avenue de la République வீதியில் வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

€100,000 யூரோக்கள் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்