பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு: இம்மானுவேல் மக்ரோன்

9 சித்திரை 2025 புதன் 20:37 | பார்வைகள் : 2316
பாலஸ்தீனம் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரான்சால் இதுவரை அங்கீகரிக்கபடவில்லை.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று பாலஸ்தீன அரசை ஜூன் மாதத்தில் இருந்து அங்கீகரிக்க போவதாக அறிவித்தார். நியூயோர்க்கில் சவுதி அரேபியாவுடன் இணைந்து அவர் தலைமை தாங்கும் ஒரு மாநாட்டின் போது இது அறிவிக்கப்படும், மேலும் இது பல நாடுகளால் இஸ்ரேலை அங்கீகரிக்க வழிவகுக்கும் என்றும் கூறினார். ஏனென்றால் ஒரு கட்டத்தில் அது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார்.
"மேலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அனைவரும் இஸ்ரேலை அங்கீகரிக்க விரும்புவதில்லை" இது ஈரானின் நிலை போல என்று அவர் தொடர்ந்து கூறினார்.
மேலும் இஸ்ரேலை அங்கீகரிக்க அனுமதிக்கும் ஒரு கூட்டு இயக்கத்தில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். இஸ்ரேலின் இருப்பு உரிமையை மறுப்பவர்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் தெளிவாக இருக்கவும், பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பிற்கு நம்மை அர்ப்பணிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.