2025 ஆம் ஆண்டிற்கான வரிகள் அதிகரிக்கப்படாது: நிதி அமைச்சர் அறிவிப்பு

9 சித்திரை 2025 புதன் 20:58 | பார்வைகள் : 1993
நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வளர்ச்சி 0.9% ஆக இருந்தது. நிதி நிலையில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு வளர்ச்சி கணிப்பை 0.7% ஆகக் குறைக்க முடிவு செய்தோம் என்று பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் (Eric Lombard) தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் ஏற்பட்ட புயலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பாராளுமன்றத்தால் வாக்களிக்கப்பட்ட பொதுச் செலவினங்களின் சுமையால், வளர்ச்சி குறையும் என்ற முன்னறிவிப்பு இருந்தபோதிலும், 2025 இல் வரிகள் அதிகரிக்கப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும்"நாங்கள் நாட்டின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, வரியை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மாட்டோம், ஏனெனில் தற்போதைய நிதி நிலைமையை நாங்கள் மோசமாக்க விரும்பவில்லை" , என்றும் அவர் தெரிவித்தார்.