Paristamil Navigation Paristamil advert login

அதிரடி!! சரவெடி!! - RAiD படையினர்!

 அதிரடி!!  சரவெடி!! - RAiD படையினர்!

13 மார்கழி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19830


பிரான்ஸ் நாட்டில் எத்தனையோ காவல்துறை படையினர் இருக்கின்றனர். ஆனால் எப்போதும் 'ஸ்பெஷல்' RAiD படையினர். இவர்களின் அதிரடிகளும்... சாகசங்களும்.. அப்பப்பா... மெய்சிலிர்க வைக்கும்! 
 
'பிரெஞ்சு தேசிய காவல்துறை' படையினரான RAiD படையினர் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கும், கடத்தல், கொள்ளை, பிணைக்கைதிகள் மீட்பு  போன்ற சிறப்பு 'தேவைகளுக்கு' அதிரடியாக எங்கிருந்தும் இறங்குவார்கள் இவர்கள். 
 
இதன் தலைமைச்செயலகம்  Essonne யின் Bièvres நகரில் உள்ளது. ( பரிசில் இருந்து 20 கி.மி தொலைவில்) தற்போது இந்த பிரிவினருக்கு கட்டளைத்தளபதியாக (Commander) Jean-Michel Fauvergue இருக்கிறார். 
 
2009 ஆம் ஆண்டு RAiD இல் இருந்து  Research and Intervention Brigade ( BRI) தனியாக பிரிந்து செயலாற்றி வருகிறது.  இப்படை உருவாகுவதற்கு உள்துறை அமைச்சர் Pierre Joxe ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 
 
எண்ணற்ற சாகசங்கள் செய்யும் இவர்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக செய்யும் அனைத்து சாகசங்களும் மயிர்கூச்சரியும் வகை!! 
 
இவர்களின் சிறப்பு அதிரடியாக, எதிரிகைகளை அடித்து வீழுத்துதல், வேகமாக வாகனத்தை செலுத்துதல், ஸ்னைப்பர் போன்ற ஆயுதங்களை கையாளுதல், இடங்களை தகர்த்தல், தேடுதல் மற்றும் தகவல் சேமிப்பு, காவல்துறை நாய்களை கொண்டு துப்பறிதல் போன்றவற்றில் சிறப்பு வாய்ந்தவர்கள்! 
 
சமீபத்தில் சார்லி எப்த்தோ பத்திரிகை மீது நடந்த தாக்குதலின் போதும் சரி, நவம்பர் 13 தாக்குதலின் போதும் சரி... பயங்கரவாதிகளை துரத்தி வேட்டையாடிய சம்பவங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது!!
 
'சல்யூட்' வீரர்களே!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்