Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் உலுக்கிய துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

 அமெரிக்காவில் உலுக்கிய துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

10 சித்திரை 2025 வியாழன் 03:53 | பார்வைகள் : 350


அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது.

இதில் 3 பேர் பலியானதுடன்  மேலும் மூவர் காயமடைந்தனர்.

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தாக பொலிஸாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்