Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக தொடரும் நடவடிக்கைகள்

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக தொடரும் நடவடிக்கைகள்

10 சித்திரை 2025 வியாழன் 05:54 | பார்வைகள் : 721


ஜேர்மனியில், தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது.

அவ்வகையில், ஐ.நா அமைப்பின், அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது ஜேர்மனி.

இந்த தகவலை, ஜேர்மன் புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான ஃபெடரல் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.

தாங்கள் முதலில் வந்திறங்கிய நாட்டில் தங்க முடியாத நிலையிலிருக்கும், எளிதில் ஆபத்துக்குள்ளாக வாய்ப்புள்ள சிறுவர்கள், சித்திரவதைக்கு ஆளானோர் அல்லது மருத்துவ சிகிச்சை அத்தியாவசியமாக தேவைப்படும் அகதிகளை இலக்காக கொண்டு செயல்படுகிறது இந்த அகதிகள் மீள்குடியேற்ற திட்டம்.

இந்நிலையில், ஜேர்மனியில் அடுத்த அரசை அமைப்பதற்காக Christian Democrat (CDU) கட்சி மற்றும் Social Democrats (SPD) கட்சி ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனிக்கான ஐ.நா அகதிகள் ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளரான Chris Melzer தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்