மரீன் லு பென் வழக்கு : ஒருவருக்கு எட்டு மாதங்கள் சிறை!!

10 சித்திரை 2025 வியாழன் 06:27 | பார்வைகள் : 2401
அரசியல் தலைவர் மரீன் லு பென் வழக்கில், நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டுகள் தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது கட்சியின் அங்கத்தவரான ஒருவர் ஜனாதிபதி குறித்து தரக்குறைவாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். 87 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு நேற்று ஏப்ரல் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை, அவருக்கு €3,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.