பொது ஒலிபரப்பு சீர்திருத்த மசோதா மீண்டும் தள்ளிவைப்பு!!

10 சித்திரை 2025 வியாழன் 07:38 | பார்வைகள் : 1217
பொது ஒலிபரப்புத் துறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டமசோதாவின் விவாதம், பாராளுமன்றத்தில் இந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த நிலையில், அது காலவரையற்றதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிகப் பணி சுமை காரணமாகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏப்ரல் 9 அன்று அறிவித்துள்ளது. தற்போது பொருளாதார நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் மசோதா மற்றும் அதனைச் சார்ந்த 2,000 திருத்தங்களை முடிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இது ஆச்சரியமானதல்ல" அரசாங்கம் மற்றும் அதில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள், ஒலிபரப்புத் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க உறுதியாக உள்ளதாகவும் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.