2 சாதனைகளை படைத்த ஷர்துல் தாக்கூர்

10 சித்திரை 2025 வியாழன் 09:12 | பார்வைகள் : 601
2025 ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதியது.
இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய லக்னோ அணி, 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டி லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூருக்கு 100வது ஐபிஎல் போட்டி ஆகும்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாமல் இருந்த ஷர்துல் தாக்கூர்(shardul thakur), காயம் காரணமாக விலகியவருக்குப் பதிலாக மாற்று வீரராக லக்னோ அணியில் இணைந்தார்.
தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சிறப்பு சீருடையை, லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கானிடம் இருந்து பெற்றார்.
தனது 100வது போட்டியில் ஷர்துல் தாக்கூர், ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கொல்கத்தாவிற்கு எதிரான 13 வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 5 வைடுகளை வீசிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) ஆகியோர் தொடர்ச்சியாக 4 வைடுகள் வீசியுள்ளனர்.
இந்த இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர், மொத்தமாக 8 வைடுகளை வீசினார். இதன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக வைடு வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.
13 ஓவரில் மொத்தம் 11 பந்துகளை வீசினார் ஷர்துல் தாக்கூர். ஏற்கனவே துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 11 11 பந்துகளை வீசியுள்ளனர். இந்த போட்டியில் லக்னோ பந்து வீச்சாளர்கள் 20 வைடுகளை வீசியுள்ளனர்.
அதே வேளையில், இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அதிக விக்கெட்கள்(9) வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.