இலங்கையில் 15 ஆம் திகதி அரச விடுமுறை தொடர்பில் எச்சரிக்கை

10 சித்திரை 2025 வியாழன் 09:55 | பார்வைகள் : 1524
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை என அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசு தகவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை, எனவே, இவ்வாறான போலி தகவல்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.