பிரான்ஸ் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!

10 சித்திரை 2025 வியாழன் 11:40 | பார்வைகள் : 1125
ஜூன் மாதத்தில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது "பயங்கரவாதத்திற்கு வெகுமதியாகவும் ஹமாஸை ஊக்கபடுத்துவதாகவும் இருக்கும்" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை மாலை சமூக வலைத்தளமான X இல் பதிவு செய்து உள்ளார்.
"போர் தொடரும் இன்றைய காலகட்டத்தில் பாலஸ்தீன அரசை உருவாக்குவது பற்றிப் பேசுவது முற்றிலும் பொறுப்பற்றது" என்று பிரான்சுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோசுவா சர்கா (Joshua Zarka) கூறியுள்ளார்.
இது "மிகவும் சீக்கிரம் அமைதிக்கு வழிவகுக்கும் தீர்வுகளை எடுப்பதற்கு முன்பு, பாலஸ்தீன அரசைப் பற்றி பேசுவது முற்றிலும் நேர்மாறானது," என்று இஸ்ரேலிய தூதர் மேலும் தெரிவித்துள்ளார்.
"பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது" என்பது "சரியான பாதையில் செல்லவதற்கான ஒரு படி" என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் வர்சென் அகாபெகியன் ஷாஹின் (Varsen Aghabekian Shahin) பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.