Metro 14 உலக சாதனை: ஒவ்வொரு 85 வினாடிக்கும் ஒரு மெட்ரோ!

10 சித்திரை 2025 வியாழன் 12:59 | பார்வைகள் : 2029
ஏப்ரல் 1 முதல் நெரிசல் நேரத்தில் Metro 14 ஒவ்வொரு 85 வினாடிகள் இடைவெளியில் இயங்குகிறது. இது மார்ச் மாதத்தை விட பத்து வினாடிகள் குறைவாகும், மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு, l’aéroport d’Orly முதல் Saint-Denis - Pleyel வரை தானியங்கி மெட்ரோ நீடிக்கப்படுவதற்கு முன்பு இருந்ததை விட 20 வினாடிகளை மிச்சப்படுத்துகிறது.
ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 120 மீட்டர் நீளமுள்ள மெட்ரோ நெரிசலான நேரங்களில் மெட்ரோகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 72 மெட்ரோகள் சுமார் 800,000 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளில் மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.
Metro 14 ஒவ்வொரு 85 வினாடிகள் இடைவெளியில் இயங்குவது என்பது உலக சாதனை என்று RATP குழுவின் தலைவர் ஜீன் காஸ்டெக்ஸ் (Jean Castex) இந்த புதன்கிழமை கூறியுள்ளார்.