Paristamil Navigation Paristamil advert login

Horace Vernet - யுத்த களங்களை ஓவியமாக தீட்டியவர்!

Horace Vernet - யுத்த களங்களை ஓவியமாக தீட்டியவர்!

11 மார்கழி 2016 ஞாயிறு 11:30 | பார்வைகள் : 19368


இவர் ஒரு ஓவியர். ஆனால் இத்தனை சுருக்கமானதொரு வசனத்தால் அவரை அடையாளப்படுத்திவிட முடியாது. 'போர்க்கள'ங்களை வரையும் ஓவியர். போரின் வலியயை, அதன் தாக்கத்தை தன் தூரிகைக்குள் அடக்கியவர். 
 
பிரெஞ்சு ஓவியர் Carle Vernetக்கு மகனாகப் பிறந்தவர் Horace Vernet. முழுப்பெயர் Émile Jean-Horace Vernet. ஜூன் 30, 1789 இவர் பிறந்த நேரத்தில் பிரெஞ்சு புரட்சி வலுப்பெற்றிருந்தது. சிறுவயது முதலே ஓவியங்களை வரைந்த Horace, யுத்த களங்களை பேசு பொருளாக கொண்டார். இது தவிர சுவரோவியம் உள்ளிட்ட பிற முயற்சிகளையும் மேற்கொண்டார். 
 
மிகப்புகழ் பெற்ற The Battle of Valmy ஓவியர், இவரின் 37வது வயதில் வரைந்தார். Valmy மகா யுத்தத்தை இன்றுவரை அடையாளப்படுத்தவும், நினைவுகூரவும் இந்த ஓவியமே உதவியாக உள்ளது. Polish Prometheus எனும் ஒரு ஓவியம், சிப்பாய் ஒருவனின் நெஞ்சில் ராஜகாளி ஒன்று கால்களை புதைத்து வைத்திருப்பது போன்ற வலிமிக்க ஓவியம். Horace ஓவியங்களில் உள்ள முக்கிய இடம் இதற்கு உண்டு. 
 
இது தவிர, Hunting in the Pontine Marshes, Mexican Expedition, Study of Olympe Pélissier as Judith, The Taking of the Malakoff Redoubt போன்ற ஓவியங்களும் பிரசித்தம். அடையாளங்களை நிரந்தரமாக்கிவிட்டு ஓவியர் Horace Vernet 17 ஜனவரி, 1863 ஆண்டு இறந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்