Paristamil Navigation Paristamil advert login

இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி..!

இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி..!

10 சித்திரை 2025 வியாழன் 14:57 | பார்வைகள் : 635


அஜித், த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் ரிசல்ட் குவிந்து வருகிறது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு பேன்பாயாக ஆதிக் இந்த படத்தை எடுத்துள்ளார் என்றும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் முழு திருப்தியோடு தியேட்டரில் கொண்டாட்டத்துடன் வெளியே வந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ’மார்க் ஆண்டனி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அஜித் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக்கிற்கே கொடுக்க இருப்பதாகவும், அந்த படத்தையும் 'மைத்ரி மூவி மகேஷ்' நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, மீண்டும் ஒரு ஃபேன்பாய் சம்பவம் விரைவில் இருக்கிறது என்றும், இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக, அஜித்துக்கு ஒரு இயக்குநரை பிடித்து விட்டால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தருவார் என்பதை கடந்த காலத்தில் சிறுத்தை சிவா, எச்.வினோத் ஆகியோருக்கு கொடுத்த வாய்ப்புகள் மூலம் புரிந்து கொள்ளலாம். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அடுத்தடுத்து திரைப்படங்கள் இயக்க வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்