Paristamil Navigation Paristamil advert login

நான்கு இலட்சம் பிரெஞ்சு வீரர்கள்! - கிரீமியன் யுத்தம்!!

நான்கு இலட்சம் பிரெஞ்சு வீரர்கள்! - கிரீமியன் யுத்தம்!!

10 மார்கழி 2016 சனி 10:30 | பார்வைகள் : 19150


யுத்தங்களும் பேரழிவுகளும் இல்லாமல் எந்த நாட்டின் வரலாறுகளும் இல்லை! பிரெஞ்சு தேசம் முதலாம் இரண்டாம் உலகப்போர்களை சந்திக்கும் முன்னர் பல யுத்தங்களை கண்டது. அதில் ஒன்றுதான் நான்கு இலட்சம் பிரெஞ்சு வீரர்கள் கலந்துகொண்ட கிரீமியன் யுத்தம்!
 
கிரீமியன் யுத்தம் குறித்து மிக சுருக்கமாக சொல்வது மெத்த கடினம். 1853 ஆம் வருடத்தின்  ஒக்டோபர் மாதம் அது. பொருளாதார நெருக்கடிக்குள் கடினமாக சிக்கிக்கொண்ட பிரித்தானியா, இரஷ்யாவின் கிரீமிய தீபகற்பம் (கிழக்கு ஐரோப்பா) மீது போர்தொடுத்தது. இந்த போருக்கு பிரித்தானியா பிரான்சின் உதவியை கோரியது. பிரித்தானியாவுக்காக இரஷ்யாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டது பிரான்ஸ். இந்த ஒரு காரணம் தவிர கிரீமியன் யுத்தத்துக்கும் பிரான்சுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை!!
 
கிரீமியன் யுத்தத்துக்காக பிரான்சை மட்டும் உள் இழுக்கவில்லை. ஒட்டோமன், சர்தினியா ஆகிய நாடுகளையும் உள் இழுத்தது பிரித்தானியா. பிரான்ஸ் Napoléon III தலைமையுடன்,  Jacques Leroy de Saint Arnaud, Maréchal Canrobert, Aimable Pélissier, François Achille Bazain,  Patrice de Mac-Mahon ஆகிய படைத்தலைவர்களுடனும், 4 இலட்சம் சிப்பாய்க்களுடனும் களத்தில் குதித்தது. ஒக்டோபர் 1853 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம்... நான்கு வருடங்கள் நீடித்து.. மார்ச் 30ம் திகதி, 1856இல் முடிவுக்கு வந்தது. யுத்த முடிவில், நேச நாடுகளின் ஆயுதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றது இரஷ்யா.
 
வெற்றி தான்...  என்றாலும்.. 'நோக்கம்' இல்லாமல் கலந்துகொண்ட பிரான்ஸ் 95,000 வீரர்களை காவுகொடுத்தது. இதில் 10,240 பேர் யுத்த களத்தில் மாண்டார்கள், 20,000 பேர் குண்டடிபட்டு இறந்தார்கள். சோகம் என்னவென்றால்.. மீதி 60,000 வீரர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள்.இதன் முடிவில் நேச நாடுகள் இணைந்து 'பரிஸ் ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இரஷ்யாவை தோற்கடித்தாலும்.. அதன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை கைவிடாமல் தொடர்ந்தது பிரித்தானியா என வரலாறு நீள்கிறது...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்