Kylian Mbappé விவகாரம் : PGS வங்கிக்கணக்கில் இருந்து பெரும் தொகை முடக்கம்!!
10 சித்திரை 2025 வியாழன் 16:28 | பார்வைகள் : 7228
PSG கழகத்துக்கும் Kylian Mbappé க்கும் இடையே சம்பள பிரச்சனை ஒன்று இருப்பது அறிந்ததே. தற்போது நீதிமன்றத்தில் விசாரணைகளில் உள்ள இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக PSG வங்கிக்கணக்கில் இருந்து 55 மில்லியன் யூரோக்கள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக்கணக்கில் உள்ள தொகையில், €55 மில்லியன் யூரோக்கள் பணத்தை பயன்படுத்தமுடியாதபடி நிலுவையில் வைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. PSG கழகம் மூன்று மாத சம்பளத்தை தரவில்லை என பலமுறை Mbappé குற்றச்சாட்டினை முன்வைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை பிரெஞ்சு உதைப்பந்தாட்ட சம்மேளனம் l'Union nationale des footballeurs professionnels - UNFP) முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், Mbappé ற்கு பணத்தை வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணையிடுவதற்கு பதிலாக அத்தொகையை முடக்கி வைத்துள்ளது. அதை அடுத்து விரையில் அத்தொகை Mbappé இற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan