Hoche மெட்ரோ அருகே கத்தி சண்டையால் பரபரப்பு !

10 சித்திரை 2025 வியாழன் 21:19 | பார்வைகள் : 1620
ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை Pantin (seine-saint-denis) பகுதியில் hoche sortie அருகே சிகரெட் விற்பனையாளர்களுக்கிடையே கத்தி சண்டை வெடித்தது. இந்த மோதல் முதலில் Leclerc வணிக வளாகத்திற்கு வெளியே தொடங்கி பின்னர் அந்தக் கட்டிடத்திற்குள் பரவியது. மோதலின் போது மூன்று பிள்ளைகளின் தாயார் தாக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார். விழுந்ததில் ஏற்பட்ட வலியைத் தவிர, உடல் ரீதியான காயம் இல்லை என தாயார் கூறியுள்ளார். நால்வர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.