2024 ஆம் ஆண்டில்.... 2,700 குழந்தைகள் இறப்பு!

11 சித்திரை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1803
பிரான்சில் குழந்தைகள் இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. சென்ற 2024 ஆம் ஆண்டில் 2,700 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள், மரபணு நோய்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டில் ஒருவயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு 1,000 குழந்தை பிறப்புக்கும் 3.5 குழந்தைகள் இறப்பு பதிவாகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் மட்டுமே இந்த மோசமான பதிவை வைத்துள்ளது.
ஒவ்வொரு 250 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது முதலாவது பிறந்தநாளுக்கு முன்னதாகவே இறக்கிறது. குழந்தைகளில் ஆண் குழந்தைகளே அதிகளவில் இறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தரவுகளை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது.