”நீங்கள் திருடினீர்கள்... நீங்கள் செலுத்துகிறீர்கள்” - கேப்ரியல் அத்தாலின் வார்த்தை பிரயோகத்தால் கொந்தளித்த லு பென்!!

11 சித்திரை 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 2273
அரசியல் கட்சித்தலைவர் மரீன் லு பென்னுக்கு நீதிமன்றம் ஐந்தாண்டுகள் தகுதியின்மை தண்டனை விதித்துள்ளமை அறிந்ததே. அதில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அடுத்த மூன்று ஆண்டுள் எவ்வித அரசியல் செயற்பாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது. அதை அடுத்து 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே பிரான்சின் முன்னாள் பிரதமர் கேப்ரியல் அத்தால் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி கூட்டணிக்கான கூட்டம் ஒன்றில் வைத்து மரீன் லு பென்னை கடுமையாக சீண்டினார். ‘நீ உடைத்தாய்.. நீயே பழுதுபார்’ என ஒரு பிரபலமான பிரெஞ்சு வார்த்தையை (tu casses, tu répares) மாதிரியாகக்கொண்டு ‘நீங்கள் திருடினீர்கள்.. நீங்கள் திருப்பிச் செலுத்துகிறீர்கள் ("Tu voles, tu payes) என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து உடனடியாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக RN கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மரீன் லு பென் தெரிவிக்கையில், “அவர் பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர். முன்னாள் பிரதமராக இருந்ததை எண்ணி வருந்தவேண்டும், இவ்வளவு பலவீனமான, கீழ்த்தரமான வாதம்” என மிக காட்டமாக தெரிவித்தார்.