மறு அறிவித்தல் வரை Issy மெற்றோ நிலையம் மூடப்படுகிறது!!

11 சித்திரை 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 1553
மறு அறிவித்தல் வரை Issy (Hauts-de-Seine) மெற்றோ நிலையம் மூடப்படுவதாக SNCF அறிவித்துள்ளது.
நேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி இந்த நிலையம் மூடப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, இது தொடர்பாக SNCF அதிகாரிகளிடம் வினாவிய போது இத்தகவலை அவர்கள் தெரிவித்தனர். குறித்த தொடருந்து நிலையத்தில் பயணிகள் பல சட்டவிரோதமாக தண்டவாளத்தினைக் கடப்பதாகவும், இதனால் உயிராபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த மெற்றோ நிலையத்துக்குரிய நிலகீழ் சுரங்கள் கடந்த சில நாட்களாக திருத்தப்பணிகளுக்கு உள்ளாகிவருகிறது. அதை அடுத்து பயணிகள் தண்டவாளத்தைக் கடப்பதாக முறைப்பாடு எழுந்தது. அதை அடுத்து நிலையம் மூடப்பட்டது. இதனால் RER C சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.