மீண்டும் CSK அணித்தலைவரான தோனி - ருதுராஜ் விலகல்

11 சித்திரை 2025 வெள்ளி 04:08 | பார்வைகள் : 267
சென்னை அணியின் அணித்தலைவராக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியை அடைந்து தடுமாறி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவராக அந்த அணியை வழிநடத்திய தோனி, 2024 ஐபிஎல் தொடரில் அந்த பொறுப்பை ருதுராஜ் கெயிக்வாட்டிடம் வழங்கினார்.
10 முறை இறுதிப்போட்டிக்கு சென்று, 5 முறை கோப்பை வென்ற சென்னை அணி, புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளதால் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதால், எதிர்வரும் போட்டிகளில் தோனியே சென்னை அணியின் அணித்தலைவராக அணியை வழிநடத்துவார் என பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
நாளை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், தோனியை அணித்தலைவராக காண CSK ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில், இதுவரை 226 போட்டிகளில் சென்னை அணிக்கு அணித்தலைவராக இருந்து, 113 போட்டிகளில் வெற்றி பெற வைத்து, அதிக வெற்றிகளை பெற்ற ஐபிஎல் அணித்தலைவராக உள்ளார்.