வாட்ஸ்அப்பில் வரும் புதிய அம்சங்கள்

11 சித்திரை 2025 வெள்ளி 04:15 | பார்வைகள் : 244
வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவர தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் குழுவில் அதிகளவிலான செய்திகள் வருவதால், பலரும் அந்த குழுக்களை Mute செய்யும் நிலை உள்ளது.
தற்போது குறிப்பிட்ட நபர் அனுப்பும் செய்திகளுக்கு மட்டும் Notification பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களது இணைய இணைப்பு சரியாக இருந்து, நீங்கள் குழுவை திறக்காமல் இருந்தால், நீங்கள் உள்ள குழுக்களில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது காட்டப்படும்.
அதே நேரம், பயனர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு ஆன்லைன் செயல்பாட்டை மறைக்கும் வசதியையும் அளிக்கிறது. ஆன்லைன் விசிபிலிட்டியை ஆப் செய்துவிட்டு, ஆன்லைனில் இருந்தாலும் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது.
பயனர்கள் இப்போது குழு மற்றும்தனிப்பட்ட அரட்டைகள் இரண்டிலும் நிகழ்வுகளை(event) உருவாக்கி நிர்வகிக்கலாம்.
நீங்கள் பயணத்தில் இருக்கும் போது குரல் செய்திகளை கேட்க முடியாது. சேனல்களில் வரும் குரல் செய்திகளை, எழுத்துச் சுருக்கமாக பெறும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ அழைப்பின் போது, Pinch to Zoom என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ அழைப்பில் எதிரே உள்ளவரை நெருக்கமாக Zoom செய்து பார்க்க முடியும்.
ஐபோன் பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் மூலம் நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் மற்றும் பகிரலாம்.
ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பை இயல்புநிலை(Default) மெசேஜ்ஜிங் மற்றும் அழைப்பு பயன்பாடாக மாற்றிக்கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை, பெறுநர் தனது செல்போனில் சேமிப்பதை தடுக்கும் வசதி Xஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி குற்ற செயல்களில் ஈடுபடுவது, தவறுதலாக அனுப்பப்பட்ட முக்கிய கோப்புகள் கசிவது போன்ற சூழலில் தனியுரிமை தொடர்பான இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், சாட் வரலாற்றையும் Export செய்வதை தடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.