Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க வரிகளின் இடைநிறுத்தம் உறுதியற்றது: இம்மானுவேல் மக்ரோன்!

அமெரிக்க வரிகளின் இடைநிறுத்தம் உறுதியற்றது:  இம்மானுவேல் மக்ரோன்!

11 சித்திரை 2025 வெள்ளி 06:52 | பார்வைகள் : 1794


அமெரிக்கா 90 நாட்கள் வரிவிதிப்பை இடைநிறுத்தியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இடைநிறுத்தம் உறுதியற்றது எனவும், இதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இம்மானுவேல் மக்ரோன் தனது X தளத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி பதிவிட்டுளளார்.

இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது 25% வரியும், பிற பொருட்களுக்கு 10% வரியும் தொடர்ந்தும் அமுலில் உள்ளன. இதனால் ஐரோப்பா வருடத்திற்கு சுமார் 52 பில்லியன் யூரோ அளவிலான பொருளாதார சேதத்தை சந்திக்கிறது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த அநியாய வரிவிதிப்புகளை முழுமையாக நீக்க பேச தயாராக உள்ளன எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் “இது வேலைவாய்ப்புகளுக்கும் தொழில் ரீதியாகவும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதற்கு ஐரோப்பா வலிமையாக பதிலடி கொடுக்க வேண்டும்,” என இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்