புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் - கனடா பிரதமர்

11 சித்திரை 2025 வெள்ளி 10:21 | பார்வைகள் : 768
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், புலம்பெயர்தல் தொடர்பில் மேற்கொண்டுவரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
ட்ரம்ப் புலம்பெயர்தல் தொடர்பில் மேற்கொண்டுவரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
அத்துடன், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்தால் அவர்களை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
கனடாவில் புகலிடம் கோருவதற்காக மக்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார் கார்னி.
The Canada-U.S. Safe Third Country Agreement என்னும் ஒப்பந்தத்தின்படி, அப்படி அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வருபவர்களை நம்மால் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பிவிடமுடியும் என்று கூறியுள்ளார் கார்னி.
அமெரிக்காவில் சூழ்நிலை மாறிவிட்டது என்று கூறியுள்ள அவர், புகலிடக்கோரிக்கையாளர்கள் அலைபோல் வரும் நிலைமை உருவாகலாம்.
ஆகவே, இந்த விடயத்தைக் கையாள அமெரிக்காவும் கனடாவும் இணைந்து செயல்பட்டாகவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.