மகிழுந்து airbags இல் ஊழல் - பல்வேறு மகிழுந்து நிறுவனங்களுக்கு சிக்கல்!!

11 சித்திரை 2025 வெள்ளி 11:06 | பார்வைகள் : 2240
பிரான்சில் செய்யப்பட்ட சில மகிழுந்துகளில் உள்ள AirBags சரிவர இயங்குவதில் சிக்கல் எழுந்ததை அடுத்து பல நிறுவனங்களைச் சேர்ந்த மகிழுந்துகள் சோதனையிடப்பட்டு வருகின்றன.
Volkswagen மற்றும் Citroën நிறுவனங்களைச் சேந்த மகிழுந்துகளின் AirBags ஏற்கனவே சோதனைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது Toyota மற்றும் Mercedes-Benz ஆகிய நிறுவனங்களின் மகிழுந்துகளும் சோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 20 மொடல் வரையான மகிழுந்துகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
Takata எனும் பிரபல நிறுவனம் தயாரித்த AirBags சரிவர செயற்படவில்லை எனும் குற்றச்சாட்டு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. 67 மில்லியன் பாகங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனந்த்தைச் சேர்ந்த AirBags பயன்படுத்திய Volkswagen மற்றும் Citroën நிறுவனங்கள் அதனை மாற்றி பொருத்திக்கொடுக்க உறுதியளித்துள்ளன. அந்த பட்டியலில் தற்போது Toyota மற்றும் Mercedes-Benz நிறுவனங்களும் இணைந்துள்ளன. பிரான்சில் 2 மில்லியன் மகிழுந்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.