Paristamil Navigation Paristamil advert login

திரும்பும் திசை எங்கும் மாணவர்கள்.. ஆசிரியர்கள்

 திரும்பும் திசை எங்கும் மாணவர்கள்.. ஆசிரியர்கள்

1 மார்கழி 2016 வியாழன் 09:39 | பார்வைகள் : 19778


பரிஸ் நகரிலே, எங்கெங்கெல்லாம் உல்லாசப் பயணிகள் வந்து போவார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எங்கெல்லாம் காதலர்கள் கூடி நிற்பார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் எங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் நிறைந்துபோய் இருப்பார்கள் தெரியுமா? 

 

பரிஸ் நகரம் பல சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அல்லவா? அவற்றை Quartier  என்போம். அதில் மிகவும் முக்கியமானது Quartier latin ஆகும்.

இங்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், முக்கியமான பாடசாலைகள், ஆராய்ச்சி மையங்கள் என பல அறிவுசார் நிறுவனங்கள் குவிந்து போய் உள்ளன. 

 

பரிசின் 5 ம் மற்றும் 6 ம் வட்டாரங்களை ஊடறுக்கும் இந்த Quartier latin  இல் தான் உலகப் புகழ்பெற்ற Sorbonne பல்கலைக்கழகமும் உள்ளது. 

 

மேலும் Université Paris-1 Panthéon-Sorbonne, Université Panthéon-Assas, Université Sorbonne Nouvelle - Paris 3, Université Paris-Sorbonne, Université Paris Descartes, Université Pierre-et-Marie-Curie, Université Paris Diderot 

 

என்று பல பல்கலைக் கழகங்களும் 

 

Lycée Fénelon, Lycée Henri-IV, Lycée Lavoisier, Lycée Louis-le-Grand, Lycée Montaigne, Lycée Saint-Louis  போன்ற உயர் கல்வி நிறுவனங்களும்,

 

Institut supérieur d'électronique de Paris, Institut Curie, Institut Pasteur, Institut de biologie physico-chimique, Institut Henri-Poincaré, Institut de physique du globe de Paris, Institut, océanographique de Paris, Institut de géographie

 

போன்ற ஆராய்ச்சி மையங்களும் இந்த ஒரே இடத்திலேயே நிறைந்துள்ளன. 

 

இதற்கு பிரெஞ்சு மொழியின் உருவாக்கத்துக்கு காரணமாகிய ’லத்தீன்’ மொழியை நினைவுகூரும் விதமான இந்த இடத்துக்கு என்று பெயர் வைத்தமை பொருத்தம் அல்லவா?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்