Paristamil Navigation Paristamil advert login

50 இலட்சம் பிரதிகள் விற்று - சாதனை செய்த TV Magazine !!

50 இலட்சம் பிரதிகள் விற்று - சாதனை செய்த TV Magazine !!

28 கார்த்திகை 2016 திங்கள் 16:00 | பார்வைகள் : 19795


நம் நாட்டில் வெளியாகும் எத்தனை பிரெஞ்சு இதழ்களை நீங்கள் வாசிப்பதுண்டு..?? பிரஞ்சு வார/ மாத இதழ்கள் பெரும் பிரசித்தம். இதோ.. உலகின் அதிக எண்ணிக்கையான பிரதிகள் விற்கப்பட்ட இதழ்களில்... நம் நாட்டில் முதல் இடத்தில் இருப்பது TV Magazine!! இது குறித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 
 
1987 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த TV Magazine இதழ்,  Le Figaro குழுமத்தில் இருந்து வெளிவருகிறது. ஆரம்பத்தில்  Hachette Filipacchi ஆல் வெளியிடப்பட்டு, பின்னர் Le Figaro அங்கமான Quebecor World Inc வினால் வெளியிடப்பட்டு வருகிறது. இதழ், 1998 களில் நான்கு மில்லியன் பிரதிகள் விற்றது. அதன் பின்னர் படிப்படியாக விற்பனை மேலும் வளர்ந்து, 2001 ஆம் ஆண்டு, 4,489,000 பிரதிகள் விற்று...  'உலகின் அதிக விற்பனையாகும் இதழ்' பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது! 
 
5,329,711 இதழ்கள் விற்றது 2006 இல். வாராவாரம் TV Magazine இதழ்கள் விற்பனையில் அதிகரிப்பதை தொடர்ந்து, ஆசிரியர் குழாம் மேலும் சிறப்பிக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2014 ஆம் ஆண்டு அந்த சாதனையை தன் வசம் ஆக்கியது TV Magazine. 2014 இல், 5,152,112 (ஐம்பத்தொரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து நூற்றி பன்னிரெண்டு) பிரதிகள் விற்று சாதனையை தனதாக்கிக்கொண்டது.
 
இனிமேல், உங்கள் கைகளில் TV Magazine இருந்தால், அது குறித்து பெருமையுடன் படியுங்கள்!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்