Noisy-le-Grand: முன்னாள் கணவரின் கொலை முயற்சியிலிருந்து தாயை காத்த மகன்!

12 சித்திரை 2025 சனி 05:13 | பார்வைகள் : 1682
வெள்ளிக்கிழமை, 11 ஆம் திகதி Noisy-le-Grand இல், 35 வயது பெண் தனது முன்னாள் கணவரால் கழுத்திலும் வயிற்றிலும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த வன்முறை தாக்குதல் அவர்களது குடியிருப்பின் பொதுப்பகுதியில் நடைபெற்றது.
அவ்வேளையில 13 வயது மகன் தாயை காப்பாற்ற முனைந்ததால், பெரிய ஆபத்தைத் தவிர்க்க முடிந்தது. தாயின் கைகளில் இருந்த காயங்கள், தன்னை காக்க முயன்றபோது ஏற்பட்டவை என கருதப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட 37 வயது ஆணை போலீசார் கைது செய்தனர். சம்பவத்துக்குப் பின், இரு பிள்ளைகளுக்கும் "protocole féminicide" எனப்படும் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக l’hôpital Robert-Ballanger_ Aulnay-sous-Bois மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிறுவர் நலத்துறை பராமரிப்பில் (l’Aide sociale à l’enfance) வைத்து பாதுகாக்கப்படுகின்றனர்.