Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு ஒன்றில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் மரணம்

வெளிநாடு ஒன்றில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் மரணம்

12 சித்திரை 2025 சனி 09:30 | பார்வைகள் : 392


மலேசியாவின் ஷா ஆலம், டமான் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் (27 வயது) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

உடலை நெருங்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்