வெளிநாட்டவர்களை அதிகளவில் குடியேற்றுகிறதா Seine-Saint-Denis ???

12 சித்திரை 2025 சனி 09:30 | பார்வைகள் : 4283
Seine-Saint-Denis மாவட்டத்தில் அதிகளவான வெளிநாட்டவர்களை குடியேற்றுவதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
பிரெஞ்சு மாவட்டங்களில் மிக ஏழ்மையான மாவட்டமான Seine-Saint-Denis உள்ளது அனைவரும் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அங்கு வசிக்கும் சட்டபூர்வமாக குடியேறிய வெளிநாட்டவர்களும், அகதிகளும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வார வெள்ளிக்கிழமை நகரசபைக் கூட்டம் இடம்பெற்ற போது, அதிகளவான அகதிகள் குடியேற்றத்தின் விளைவு குறித்து விமர்சிக்கப்பட்டது. குடியேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்த விபரங்களை காவல்நிலையங்களூடாக சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த அனைத்து விதமான விபரங்களையும் உடனடியாக நகரசபைகளுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு வதிவிட உரிமை வழங்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1