Paristamil Navigation Paristamil advert login

நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம் - மூவர் பலி

நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம் - மூவர் பலி

12 சித்திரை 2025 சனி 09:50 | பார்வைகள் : 395


தெற்கு புளோரிடாவில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (11) அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு. இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விமான விபத்து நடந்த நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு வாகன ஓட்டி தப்பிக்க முயன்றபோது அருகிலுள்ள மரத்தில் மோதி காயமடைந்தார்.

அவரது நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.

விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்