Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர் Jean-Pierre Jeunet!!

பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர்  Jean-Pierre Jeunet!!

26 கார்த்திகை 2016 சனி 12:00 | பார்வைகள் : 19364


படைப்புகள் எத்தனை செய்கிறோம் என்பது இங்கு முக்கியமல்ல!! எத்தனை படைப்புகள் தரமாக உள்ளன என்பது தான் கேள்வி... இயக்குனராக வெறும் ஏழே திரைப்படங்கள்... ஆனால் உயரமோ... ரசிகர்கள் அடுத்த திரைப்படத்துக்காக தவம் இருக்கிறார்கள்! வாருங்கள் இன்று பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் Jean-Pierre Jeunet குறித்து பார்க்கலாம்!!
 
1991 ஆம் ஆண்டு, பன்றி ஒன்றை திரைப்பட போஸ்ட்டரில் வைத்துக்கொண்டு, Delicatessen எனும் திரைப்படம் வெளியானது. ஹீரோக்களின் புகைப்படங்களை தவிர்த்து பன்றி ஒன்றை போஸ்ட்டரில் வைத்தது பலரை அவதானத்துக்குள்ளாக்கியது. திரைப்படத்தின் முடிவில்... இரு இயக்குனர்களின் பெயர் போடப்பட்டது ஒருவர் இயக்குனர் Marc Caro.. மற்றயவர் பின்நாட்களில் மிகப்பெரும் இயக்குனராக மாறிய Jean-Pierre Jeunet. 
 
பின்னர், 1995 ஆம் ஆண்டு இதே இயக்குனர்கள் ஜோடி, The City of Lost Children எனும் திரைப்படத்தை எடுத்தது. படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாரி குவித்துக்கொண்டது. பின்னர் முதன் முறையான இயக்குனர் Jean-Pierre Jeunet நேரடியா தனது முதல் திரைப்படத்தை எடுத்தார். Alien: Resurrection எனும் அந்த திரைப்படம் வசூல் சாதனை புரிந்து.. அதிரி புதிரி ஹிட் அடித்தது!! 
 
பின்னர், ஆறு வருடங்கள் கழித்து, Jean-Pierre Jeunet தனது அடுத்த 'இன்னிங்ஸ்' ஆரம்பித்தார்! திரைப்படத்தின் பெயர் Amélie!! கதை, திரைக்கதையுடன் திரைப்படத்தை இயக்கினார். இயக்குனரின் ஒட்டுமொத்த ஆளுமையும் கொட்டி திரைப்படத்தை இயக்கினார். நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களை கட்டிப்போட்டது! 10 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், 173 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து மிரட்டியது!! 
 
அதன் பின்னர் Amélie திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் முதன் முறையாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டார். A Very Long Engagement எனும் திரைப்படம் அவரது முதல்தயாரிப்பு. படம் நன்றாக இருந்தாலும் வசூல் நிலவர சற்று குறைவாகவே இருந்தது. அதை தொடர்ந்து  Micmacs எனும் திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.  எதிர்பாரா விதமாக அத்திரைப்படமும் தோல்வியை சந்திக்க.., 
 
2013ஆம் ஆண்டு  எழுத்தாளர் Reif Larsen எழுதிய The Selected Works of T.S. Spivet நாவலை, The Young and Prodigious T.S. Spivet எனும் பெயரில் தயாரித்து இயக்கினார். படம் அட்டகாசமான வெற்றி! 
 
திரைப்படங்களின் வசூல் தான் வெற்றி தோல்வியை சந்தித்திருந்தாலும், தன் திரைப்படங்களுக்கான உழைப்பை எப்போதும் நேர்த்தியாக செய்பவர் இயக்குனர் Jean-Pierre Jeunet.
 
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்