‘சூர்யா 46’ படத்தில் இணைந்த பிரபலம்?
12 சித்திரை 2025 சனி 11:04 | பார்வைகள் : 2711
சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. அதே சமயம் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதற்கிடையில் இவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
அதற்கு முன்பாக சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தது இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராக இணைந்திருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. நிமிஷ் ரவி ஏற்கனவே லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan